Homeசெய்திகள்சென்னைநாங்க குப்பை அள்ளுவதால் குப்பை மாதிரி நடத்துறீங்களா?" — போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஆவேசம்!

நாங்க குப்பை அள்ளுவதால் குப்பை மாதிரி நடத்துறீங்களா?” — போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஆவேசம்!

-

- Advertisement -

சென்னையில் 7-வது நாளாகத் தொடரும் போராட்டம் — முதலமைச்சரை சந்திக்கும் வரை வாபஸ் இல்லை என அறிவிப்புநாங்க குப்பை அள்ளுவதால் குப்பை மாதிரி நடத்துறீங்களா?" — போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஆவேசம்!

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 7-வது நாளை எட்டியுள்ளது.

we-r-hiring

தங்களின் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்துப் பேசும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்றும், தேவைப்பட்டால் 100 நாட்கள் ஆனாலும் போராட்டம் தொடரும் என்றும் பணியாளர்கள் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளனர்.

தூய்மைப் பணியாளர்களின் கொந்தளிப்பான பேட்டி:
வாக்குறுதி என்னாச்சு:
“தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் விஜய் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயின? எங்களை ஏன் இப்படி அலட்சியப்படுத்துகிறீர்கள்? நாங்க என்ன தீண்டத்தகாதவர்களா? நாங்க நகரின் குப்பைகளை அள்ளுவதால் எங்களை குப்பை மாதிரி நடத்துகிறீர்களா?” என வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முக்கியக் கோரிக்கைகள்: தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பணியாளர்கள், உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், விலைவாசி உயர்வுக்கேற்ப ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

போராட்டம் தொடரும்: “முதலமைச்சரை நேரில் சந்தித்துத் தீர்வு காணும் வரை தங்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட மாட்டாது. 100 நாட்கள் ஆனாலும் எங்கள் உரிமைக்காகத் தொடர்ந்து போராடுவோம்” எனத் தூய்மைப் பணியாளர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சியில் ஸ்தம்பித்த சேவைகள்
7-வது நாளாகப் போராட்டம் நீடிப்பதன் காரணமாகச் சென்னையின் பல பகுதிகளில் தூய்மைப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

அரசு உடனடியாகத் தலையிட்டுத் தூய்மைப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனப் பல்வேறு சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை பேரிடர் நிவாரணப் பணிகள்: 15 மண்டலங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

MUST READ