சட்டப்பேரவை விவாதத்தின் போது, த.வெ.க அமைச்சர்களுக்கு இரு கைகூப்பி நன்றி தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு, அமைச்சர் விஜய் பாலாஜி அளித்த நகைச்சுவையான பதில் பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
சட்டப்பேரவையில் நடந்தது என்ன?
சட்டப்பேரவை வினாக்கள்-விடைகள் நேரத்தின் போது, தொகுதி கோரிக்கைகள் மற்றும் பிரச்சனை தொடர்பாகப் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், தங்களது கோரிக்கையை உடனடியாகக் பரிசீலித்த தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களுக்கு இரு கைகூப்பி நன்றி தெரிவித்தார்.

அப்போது எழுந்து பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, நகைச்சுவையாகக் குறிப்பிட்டதாவது:
“நல்லவேளை… அவரு மட்டும் (கட்சியில்) இருந்திருந்தா இந்நேரம் எல்லாமே ரெண்டாகியிருக்கும்! நீங்க த.வெ.க அமைச்சர்களுக்குக் கைகூப்பி நன்றி தெரிவிச்சது ரொம்ப சந்தோஷம்!”
சிரிப்பலையில் ஆழ்ந்த பேரவை:
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வின் நன்றியையும், அதற்கு அமைச்சர் விஜய் பாலாஜி சமயோசிதமாக அளித்த கலகலப்பான பதிலையும் கேட்டு முதலமைச்சர் விஜய் உட்பட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் பலமாகச் சிரித்து மகிழ்ந்தனர்.
சென்னை அருகில் ₹171 கோடியில் 5 புதிய தொழிற்பேட்டைகள்: அமைச்சர் மதன் ராஜா சட்டமன்றத்தில் அறிவிப்பு!
