Homeசெய்திகள்தமிழ்நாடுஎன்னை தூக்கிப் பிடித்து அமைச்சராக்கியவர் விஜய்! – பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் நெகிழ்ச்சிப் பேச்சு

என்னை தூக்கிப் பிடித்து அமைச்சராக்கியவர் விஜய்! – பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் நெகிழ்ச்சிப் பேச்சு

-

- Advertisement -

எனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதோ எனத் தடுமாறிய போது கை கொடுத்தவர் அவரே என உருக்கம்என்னை தூக்கிப் பிடித்து அமைச்சராக்கியவர் விஜய்! – பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் நெகிழ்ச்சிப் பேச்சு

எனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதோ என்று நான் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில், என்னைத் தூக்கிப் பிடித்து அமைச்சராக்கி அழகு பார்த்தவர் விஜய் அவர்கள்தான்” எனத் தமிழக அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

we-r-hiring

அரசியல் மறுவாழ்வு அளித்த தலைவர்
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தனது அரசியல் பயணத்தில் முதலமைச்சர் விஜய் அளித்த ஆதரவைக் சுட்டிக்காட்டி உணர்ச்சிப்பூர்வமாக உரையாற்றினார். அவர் பேசுகையில்:

ஒரு கட்டத்தில் எனது அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிட்டதோ என்று நினைத்து நான் மனதளவில் தடுமாறிக் கொண்டிருந்தேன். அந்த இக்கட்டான சூழலில், என்னைத் தட்டி எழுப்பி, தூக்கிப் பிடித்து, அமைச்சரவையில் இடம் கொடுத்து அமைச்சராக்கி அழகு பார்த்தவர் நமது தலைவர் விஜய் அவர்கள்தான்.

சாமானியர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு வழிகாட்டும் அவர்தான் என்றைக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

மூத்த அரசியல் தலைவரான அமைச்சர் செங்கோட்டையன், பேரவையில் முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்து பேசிய இந்த உருக்கமான உரை, சட்டமன்ற உறுப்பினர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆதாரம் இருக்கு!” – சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக ஆதாரங்களை நீட்டிய அதிமுக!

MUST READ