Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: அமைச்சர் ராஜ் மோகன் பேச்சுக்கு தி.மு.கவினர் அமளி; காதைக் மூடிக்கொண்ட...

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: அமைச்சர் ராஜ் மோகன் பேச்சுக்கு தி.மு.கவினர் அமளி; காதைக் மூடிக்கொண்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ!

-

- Advertisement -

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதங்களால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: அமைச்சர் ராஜ் மோகன் பேச்சுக்கு தி.மு.கவினர் அமளி; காதைக் மூடிக்கொண்ட அ.தி.மு.க எம்.எல்.ஏ!

அவையின் விவாதத்தின் போது பேசிய அமைச்சர் ராஜ் மோகன், தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்து சில கருத்துக்களை முன்வைத்தார். அப்போது அவர், “நீட் ஒழிப்பு ரகசியம் என்று கூறி கடந்த 5 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றியவர் உதயநிதி.

we-r-hiring

மேலும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தி.மு.க நிர்வாகி ஜாக்பா் சாதிக்கைக் கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள் என்று கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அமைச்சர் ராஜ் மோகன் தொடர்ந்து பேசப் பேச, அவையில் இருந்த தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரி அவர்கள் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

தி.மு.க-வினரின் தொடர் கூச்சலையும் அமளியையும் தாங்க முடியாத அ.தி.மு.க எம்.எல்.ஏ ஹரி, அருகில் இருந்தவர்களின் சத்தத்தைத் தவிர்க்கும் வகையில் தனது இரு கைகளால் காதுகளை மூடியபடி அவையில் அமர்ந்திருந்தார். இந்தச் சம்பவம் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

4,292 கோவில்களின் தணிக்கை அறிக்கைகள் இணையதளத்தில் பதிவேற்றம்: சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை தகவல்!

MUST READ