Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: "எங்கள் தயவில்தான் ஆட்சி நடக்கிறது" என்று உதயநிதி பேச, பதிலுக்குக்...

சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: “எங்கள் தயவில்தான் ஆட்சி நடக்கிறது” என்று உதயநிதி பேச, பதிலுக்குக் கர்ஜித்த ஆதவ்!

-

- Advertisement -

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதங்களால் அவையில் பெரும் பரபரப்பும் சிரிப்பலையும் ஏற்பட்டது.சட்டப்பேரவையில் அனல் பறந்த விவாதம்: "எங்கள் தயவில்தான் ஆட்சி நடக்கிறது" என்று உதயநிதி பேச, பதிலுக்குக் கர்ஜித்த ஆதவ்!

விவாதத்தின்போது பேசிய உதயநிதி, “இது ஒரு மெஜாரிட்டி இல்லாத அரசு; எங்களது தயவில்தான் த.வெ.க ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

we-r-hiring

தேர்தலுக்கு முன்பு நாங்கள் த.வெ.கவை பற்றி பேசவே இல்லை, அதனால்தான் அவர்கள் ஆளுங்கட்சியாகிவிட்டார்கள்” என்று த.வெ.கவை சீண்டும் வகையில் பேசினார்.

இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. உடனே சுதாரித்துக்கொண்ட சபாநாயகர், அனைவரையும் அமைதிப்படுத்த முயன்றார்.

சபாநாயகர் தி.மு.கவுக்குச் சார்பாகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய த.வெ.க எம்.எல்.ஏ ஆதவ் சட்டென எழுந்து, “எங்களையும் கொஞ்ச நேரம் பேச விடுங்கள்” என்று உரக்கக் கூறினார். இதனால் அவையில் லேசான சிரிப்பலை எழுந்தது.

உடனே உதயநிதியை நோக்கிப் பார்வையைக் திருப்பிய ஆதவ், “பேசுனதனாலதான் நீங்க இங்க இருக்கீங்க.. பேசி இருந்தீங்கனா வீட்ல இருந்திருப்பீங்க” என்று ஆவேசமாகக் கர்ஜித்தார்.

சட்டமன்றத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த நேரடி மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு: “சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு முழு அதிகாரம் வழங்கப்படவில்லை!”

MUST READ