சந்திரபாபு நாயுடுவின் வீடு முடக்கம்
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொத்தை முடக்கி அரசாணை வெளியிட்டுள்ளது அம்மாநில அரசு. முன்னாள் அமைச்சர் நாராயணாவின் சொத்துக்களையும் முடக்கியது ஆந்திர மாநில அரசு.

அமராவதியில் கிருஷ்ணா நதிக்கரையில் இருந்தா சந்திரபாபுவின் வீடு, முன்னாள் அமைச்சர் நாராயணாவின் சொத்து முடக்கப்பட்டுள்ளன. அமராவதியில் விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சந்திரபாபு, நாராயணா மீது புகார் எழுந்துள்ளது. தாடேபள்ளி மண்டலம், உண்டவல்லி கிராமத்தில் கரகாட்டா சாலையில் உள்ள நாயுடுவின் விருந்தினர் மாளிகை மற்றும் முன்னாள் அமைச்சர் பி நாராயணாவுக்கு சொந்தமான 22 அசையா சொத்துகளை முடக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

1944 ஆம் ஆண்டு அசையா சொத்துக்களை இணைத்தல், முறைகேடாக சம்பாதித்த சொத்துக்களை அப்புறப்படுத்துதல் அல்லது மறைத்தல் மற்றும் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஏபிசிஐடியின் பரிந்துரைகளின் அடிப்படையில், சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான உத்தரவுகளை அரசு பிறப்பித்தது. அமராவதியின் தலைநகர் பகுதியில் நிலங்களை உள் வர்த்தகம் செய்தது தொடர்பாக நாயுடு, நாராயணா மற்றும் பலர் மீது ஏசிபி (ஊழல் தடுப்புப் பிரிவு) மற்றும் ஏபிசிஐடி வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடதக்கது.


