விடுமுறை நாளில் பள்ளி இயங்கியது ஏன்? மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) அதிரடி நோட்டீஸ் தனியார் பள்ளி வேன் – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து
சிவகங்கை அருகே உள்ள பிரதான சாலையில் இன்று காலை தனியார் பள்ளிக்குச் சொந்தமான பள்ளி வேன் ஒன்று மாணவ-மாணவிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த பார லாரி எதிர் பாராத விதமாக வேன் மீது நேருக்கு நேர் சடாரென மோதி விபத்துக்குள்ளானது.
இந்தச் கொடூர விபத்தில், வேனின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது. விபத்து நடந்த இடத்திலேயே வேன் ஓட்டுநர் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

9 மாணவ-மாணவிகள் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விபத்தின் போது வேனில் பயணித்த 9 பள்ளி மாணவ-மாணவிகள் பலத்த காயமடைந்தனர். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், காயமடைந்த மாணவ-மாணவிகளை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
விடுமுறை நாளில் பள்ளி இயங்கியது எப்படி? கல்வித்துறை அதிரடி நடவடிக்கை
அரசு அறிவித்த அதிகாரப்பூர்வ விடுமுறை நாளில் தனியார் பள்ளி இயங்கியதும், மாணவர்களை அழைத்துச் சென்றதும் பொதுமக்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, “அரசு விடுமுறை நாளில் விதிகளை மீறி பள்ளி இயங்கியது ஏன்?” எனக் கேள்வி எழுப்பி, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு சிவகங்கை மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) உடனடியாக விளக்கம் கேட்டு அதிரடி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
உரிய விளக்கம் அளிக்காவிட்டால் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ராசிபுரம் டாஸ்மாக் கடைகளில் தொடரும் பகல் கொள்ளை: அரசு எச்சரித்தும் கூடுதலாக ரூ.10 வசூல்!
