தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, அரசு முறைப் பயணமாகத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (செப்டம்பர் 10) இரவு லண்டன் புறப்படுகிறார்.
முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணம்
சென்னையிலிருந்து புறப்பட்டு துபாய் வழியாக லண்டன் சென்றடையும் வகையில் முதலமைச்சரின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, அரசு முறைப் பயணமாக அவர் வெளிநாட்டிற்குச் செல்வது இதுவே முதல் முறையாகும். அவருடன் உயர் அரசு அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களும் உடன் செல்கின்றனர்.

இதுவரை தனது தனிப்பட்ட பயணங்களுக்குச் சொந்த செலவில் சிறப்பு விமானத்தைப் பயன்படுத்தி வந்த முதல்வர் விஜய், முதல் முறையாகத் தற்போது பயணிகள் விமானத்தில் (எமிரேட்ஸ் – EK 547) பயணிக்கவுள்ளார். சுமார் ஒரு வாரம் லண்டனில் தங்கியிருக்கும் அவரது இந்த அரசு பயணத்துக்கான செலவுகள் மற்றும் முன்னேற்பாடுகள் அனைத்தையும் தமிழக அரசின் தொழில்துறை ஏற்றுக்கொண்டுள்ளது.

முன்னேற்பாடுகள் தீவிரவாக்கம்
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு அவரது தனிச் செயலாளர்கள் இரு தினங்களுக்கு முன்பாகவே துபாய் சென்று இறங்கியுள்ளனர். இன்று இரவு துபாய் சென்றடையும் முதல்வருடன் அவர்கள் இணைந்து கொள்வார்கள் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, முதல்வரின் பயணத்தை முன்னிட்டு இன்று காலை 11.00 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் அனைத்துத் துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் விமான நிலையப் பாதுகாப்பு மற்றும் வழி அனுப்பும் முன்னேற்பாடுகள் குறித்துத் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
விமர்சனங்களும் எதிர்பார்ப்புகளும்
கடந்த மாதம் தான் சென்னையில் பிரம்மாண்ட தொழில் முதலீட்டு மாநாட்டை முதலமைச்சர் நடத்தியிருந்தார். அதற்குள்ளாகவே வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது ஏன் எனப் பல்வேறு தரப்பிலும் கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், இந்த லண்டன் பயணத்தின் மூலம் தமிழகத்திற்குப் பல கோடி ரூபாய் மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகள் கிடைக்கும் எனத் தொழில்துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
தாராபுரம் இடைத்தேர்தல்: 256-வது முறையாக ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் வேட்புமனு தாக்கல்!
