spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெந்தில் பாலாஜி வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜி வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

-

- Advertisement -

 

Photo: Senthil Balaji Twitter Page

அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக எழுந்த புகாரில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

we-r-hiring

கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் 2015- ஆம் ஆண்டு வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக கணேஷ் குமார், தேவ சகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவுக் காவல்துறையில் புகார் அளித்தனர்.

கோடைக்கால கடுமையான வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க செய்ய வேண்டியவை!

அதன் பேரில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட போது, செந்தில் பாலாஜி மீதான வழக்கை தொடக்கத்தில் இருந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யாத, சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி, ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில், கார்த்திகை ராஜன் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மின் விநியோகம்- தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு பாராட்டு

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி மீதான புகாரை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துக் கொள்ளலாம் என்றும், இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

MUST READ