ஹாலிவுட்டில் ரீமேக்: விஜய் சேதுபதி நடிப்பில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘மகாராஜா’ திரைப்படம் தற்போது ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
வரலாற்றுச் சாதனை: ஒரு தமிழ் திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி: நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான இப்படம், பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்ததுடன், சீனாவிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
விரிவானச் செய்தி:
குரங்கு பொம்மை படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பிரம்மாண்டத் திரைப்படம் ‘மகாராஜா’.
விஜய் சேதுபதியின் 50ஆவது மைல்கல் திரைப்படமாக கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான இப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மேலும், இதில் நடித்த இளம் நடிகை சாச்சனாவுக்கு சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் பாக்ஸ் ஆஃபிஸில் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்த இப்படம், ஓடிடி தளத்திலும் வெளியாகி உலகளாவிய சினிமா ரசிகர்களைக் கவர்ந்தது.
குறிப்பாக, சமீபத்தில் சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட ‘மகாராஜா’ திரைப்படம் அங்கும் மிகப்பெரிய வசூலையும் வரவேற்பையும் பெற்றது.
இந்நிலையில், தமிழ்த் திரையுலகம் பெருமை கொள்ளும் வகையில் ஒரு புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, ‘மகாராஜா’ திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம், ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் முதல் தமிழ் படம் என்ற வரலாற்றுச் சாதனையை இப்படம் படைத்துள்ளது.
நடிகர் அஜித்குமாரின் ‘ரேசிங் டீம்’ பின்னணியில் இவ்ளோ பெரிய அரசியலா? — லண்டன் பயணத்தின் கோர முகம்!
