Homeசெய்திகள்தமிழ்நாடுஅடிப்படை சட்டம் கூட தெரியாதா? த.வெ.க. மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அனல்...

அடிப்படை சட்டம் கூட தெரியாதா? த.வெ.க. மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அனல் பறக்கும் குற்றச்சாட்டுகள்!

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க.) அடிப்படை தேர்தல் சட்டங்கள் கூடத் தெரியவில்லை என்றும், அக்கட்சியின் செயல்பாடுகள் வேடிக்கையாக இருப்பதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களைச் சந்தித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், த.வெ.க. மீதும், அக்கட்சியுடன் கைகோர்த்துள்ள கூட்டணிக் கட்சிகள் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைக் கூறினார்.அடிப்படை சட்டம் கூட தெரியாதா? த.வெ.க. மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி அனல் பறக்கும் குற்றச்சாட்டுகள்!

ஆர்.எஸ். பாரதியின் முக்கியக் குற்றச்சாட்டுகள் மற்றும் விவரங்கள்
தேர்தல் ஆணைய விதிகளும் நட்சத்திரப் பேச்சாளர்களும்: இடைத்தேர்தல் விதிமுறைகளின்படி, அந்தந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமே நட்சத்திரப் பேச்சாளர்களாக (அதிகபட்சம் 40 பேர்) தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களது பிரச்சாரச் செலவுகளை அந்தச் சொந்தக் கட்சிகள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் அடிப்படைச் சட்டமாகும் என்று ஆர்.எஸ். பாரதி சுட்டிக்காட்டினார்.

we-r-hiring

அதிமுகவிலிருந்து வந்த அமைச்சர்கள் மீதான தாக்குதல்: “இன்று ஆளுங்கட்சியாக(?) இருக்கக்கூடிய தமிழக வெற்றிக் கழகத்தில், அதிமுகவிலிருந்து வந்த இரண்டு மூன்று அமைச்சர்களை வைத்துக் கொண்டு, குறிப்பாக அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் எல்லாமே தெரிந்த ஏகாம்பரம் போலப் பேசி வருகிறார்” என்று அவர் கடுமையாகச் சாடினார். மேலும், சட்டமன்றத்தில் உண்மைக்கு மாறாகப் பேசுபவர்கள் ஆறாவது அறிவை அடகு வைத்துவிட்டதாக விமர்சித்தார்.

அங்கீகாரம் பெற்ற கட்சிகள் குறித்த குழப்பம்
த.வெ.க. வெளியிட்டுள்ள நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், விசிகவைச் சேர்ந்த திருமாவளவன், வன்னி அரசு, மற்றும் மதிமுகவைச் சேர்ந்த வைகோ, துரை வைகோ, காதர் மொய்தீன் உள்ளிட்ட 8 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் மதிமுக அங்கீகரிக்கப்படாத கட்சியாக உள்ளதையும், காங்கிரஸ் மற்றும் விசிக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக இருப்பதையும் சுட்டிக்காட்டிய ஆர்.எஸ். பாரதி, “மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களைத் த.வெ.க. தன் கட்சி நட்சத்திரப் பேச்சாளர்களாகச் சேர்ப்பதன் மூலம், காங்கிரஸ் மற்றும் விசிக கட்சிகள் தங்கள் அங்காரத்தை இழந்துவிட்டனவா அல்லது த.வெ.க.வுடன் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டனவா?” என்று கேள்வி எழுப்பினார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட தலைவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். மேலும், இவர்களின் பிரச்சாரச் செலவுகளை வேட்பாளரின் தேர்தல் கணக்கில் சேர்க்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

த.வெ.க. வேட்பாளர்களை மக்கள் வாக்களிக்க விடாமல் துரத்தியடிப்பதால் தான் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும், மற்ற கட்சிகளுக்கும் சேர்த்தே அது நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட அவர், தங்களுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்து வருவதால் போலீஸ் பாதுகாப்புத் தேவையில்லை என்றார். த.வெ.க. வேட்பாளர்கள் கிராமங்களுக்கு உள்ளேயே நுழைய முடியாத மக்கள் எதிர்ப்பைச் சமாளிக்கவும், மக்களை மிரட்டவுமே இந்தத் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

இடைத்தேர்தல் பின்னணி மற்றும் விமர்சனம்
இரண்டு எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியதால்தான் இந்த இடைத்தேர்தலே வந்துள்ளது என்றும், இரண்டு மந்திரி பதவிகளைக் கொடுத்து காங்கிரஸையும் விலைக்கு வாங்கியதால்தான் அவர்கள் இன்று த.வெ.க. சார்பாகப் பிரச்சாரம் செய்ய நேரிட்டுள்ளது என்றும் ஆர்.எஸ். பாரதி கடுமையாகத் தாக்குத் தொடுத்தார்.

இறுதியில் பேசிய அவர், திமுக தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரச்சார விவரங்கள் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். எல்லை தாண்டிய கூட்டணிக் கணக்குகளும், நட்சத்திரப் பேச்சாளர் விவகாரமும் தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

மக்களுக்கு ஆதரவு, எதிர்ப்புக்கு கண்டனம்: மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு எப்போதும் மாறாது – மாநில செயலாளர் பெ.சண்முகம் பேட்டி!

MUST READ