Homeசெய்திகள்அரசியல்பாஜகவில் அதிரடி மாற்றங்கள்: தமிழக பொறுப்பாளராக ராம் மாதவ் நியமனம்; ஆந்திர இணை பொறுப்பாளராக வானதி...

பாஜகவில் அதிரடி மாற்றங்கள்: தமிழக பொறுப்பாளராக ராம் மாதவ் நியமனம்; ஆந்திர இணை பொறுப்பாளராக வானதி சீனிவாசன் பொறுப்பேற்பு!

-

- Advertisement -

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய அமைப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு பாஜகவின் புதிய மாநிலப் பொறுப்பாளராக கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ராம் மாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.பாஜகவில் அதிரடி மாற்றங்கள்: தமிழக பொறுப்பாளராக ராம் மாதவ் நியமனம்; ஆந்திர இணை பொறுப்பாளராக வானதி சீனிவாசன் பொறுப்பேற்பு!

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசனுக்கு ஆந்திர மாநில இணை பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

we-r-hiring

புதிய பொறுப்பாளர்கள் விவரம்:
தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர்: ராம் மாதவ் (தேசியத் துணைத் தலைவர்)
தமிழ்நாடு பாஜக இணை பொறுப்பாளர்கள்: நிர்மல் குமார் சுரானா, கே. அருணா
ஆந்திர மாநில இணை பொறுப்பாளர்: வானதி சீனிவாசன் (தேசியத் தலைவர் / முன்னாள் எம்.எல்.ஏ)

ராம் மாதவ்வின் அரசியல் பின்னணி:
புதிதாகத் தமிழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராம் மாதவ், ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக தனது பொதுவாழ்வைத் தொடங்கியவர்.

கடந்த 2014 முதல் 2020 வரை பாஜக தேசியப் பொதுச்செயலாளராகச் சிறப்பாகப் பணியாற்றிய அவர், ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கட்சியை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றியவர்.

குறிப்பாக, ஜம்மு-காஷ்மீரில் பாஜக – பிடிபி கூட்டணி அரசை உருவாக்குவதில் இவரின் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக மேலிடப் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.

தற்போது 2026ஆம் ஆண்டுக்கான தேசிய நிர்வாகிகள் குழுவில் மீண்டும் முக்கியப் பொறுப்பைப் பெற்றுள்ள அவருக்கு, தமிழகத்தின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது.

வானதி சீனிவாசனுக்கு முக்கியப் பொறுப்பு:
மறுபுறம், தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவின் முக்கிய முகங்களில் ஒருவரான வானதி சீனிவாசன், ஆந்திர மாநில பாஜகவின் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிக்குச் சொந்தமான மாநிலங்களைத் தாண்டி அண்டை மாநிலமான ஆந்திராவிலும் இவரது நிர்வாகத் திறமையைப் பயன்படுத்தும் வகையில் தேசியத் தலைமை இந்தப் பொறுப்பை வழங்கியுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் புதிய பொறுப்பாளர்களையும், இணை பொறுப்பாளர்களையும் மாற்றி பாஜக தேசியத் தலைமை வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, கட்சியை மேலும் பலப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதுராந்தகம் இடைத்தேர்தல்: “நம்பி வாக்களித்து ஏமாந்தது போதும்” – திமுக வேட்பாளர் பரந்தாமன் பரபரப்பு பேச்சு!

MUST READ