Homeசெய்திகள்சென்னைபகீர் சம்பவம்: புழல் ஏரிக்கரையில் மது அருந்தியபோது தகராறு – வாலிபர் கத்தியால் குத்திக் கொலை;...

பகீர் சம்பவம்: புழல் ஏரிக்கரையில் மது அருந்தியபோது தகராறு – வாலிபர் கத்தியால் குத்திக் கொலை; உடலை எரித்து ஏரியில் வீசிய நண்பர்கள் 3 பேர் கைது!

-

- Advertisement -
புழல் ஏரிக்கரையில் மது அருந்துபோது ஏற்பட்ட திடீர் தகராறில், முகுந்தன் என்ற இளைஞர் அவரது நண்பர்களால் கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 3 நண்பர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.பகீர் சம்பவம்: புழல் ஏரிக்கரையில் மது அருந்தியபோது தகராறு – வாலிபர் கத்தியால் குத்திக் கொலை; உடலை எரித்து ஏரியில் வீசிய நண்பர்கள் 3 பேர் கைது!
மது விருந்தில் மூண்ட தகராறு:
கொலை செய்யப்பட்ட முகுந்தனும், அவரது நண்பரான சஞ்சய்யும் புழல் ஏரிக்கரைப் பகுதியில் அமர்ந்து மது அருந்தத் தொடங்கியுள்ளனர். அப்போது சஞ்சய், தன்னுடைய மேலும் இரண்டு நண்பர்களை அந்த இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.
அவர்கள் இருவரும் அங்கு வந்ததும், முகுந்தன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “நமக்கே இந்த மதுபானம் பத்தாது, எதுக்காக இவர்களை இங்கே அழைத்தாய்?” என்று முகுந்தன் சஞ்சய்யிடம் கேட்டுள்ளார். இதனால் நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைக்கலப்பாக மாறியுள்ளது.
கொலை மற்றும் உடல் எரிப்பு:
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து முகுந்தனை சரமாரியாகக் குத்தியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முகுந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதன்பின்னர், கொலையை மறைப்பதற்காக பயந்துபோன அந்த கும்பல், முகுந்தனின் உடலுக்கு தீயிட்டு எரித்துள்ளனர். பின்னர், பாதி எரிந்த நிலையில் இருந்த உடலை யாருக்கும் தெரியாமல் புழல் ஏரிக்குள் வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.
போலீசார் அதிரடி கைது:
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சஞ்சய் உள்ளிட்ட 3 நண்பர்களை போலீசார் விரைந்து செயல்பட்டு கைது செய்தனர்.
கைதானவர்களிடம் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://www.apcnewstamil.com/news/chennai/chennai-metro-vadapalani-poonamallee-fare-details/235053

MUST READ