பாஜகவின் வெறுப்பு அரசியல் முறியடிப்பு- ராகுல்காந்தி
காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார்.
கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய ராகுல்காந்தி, “பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தலைவர்கள், காங்கிரஸ் தொண்அர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி. கர்நாடக தேர்தலில் வெற்றி பெற பாஜக அனைத்து பலத்தையும் பயன்படுத்தியது. பாஜகவின் அனைத்து பலத்தையும் தாண்டி கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. உண்மை மற்றும் ஏழை மக்களுக்காக குரல் கொடுத்ததால் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக தேர்தல் முடிவின் மூலம் பாஜகவின் வெறுப்பு அரசியல் முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே 5 முக்கிய வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பட்டதாரி இளைஞர்களுக்கு உதவித்தொகை, 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2,000 உரிமைத் தொகை, 10 கிலோ இலவச அரிசி ஆகிய 5 முக்கிய வாக்குறுதிகள் உடனே நிறைவேற்றப்படும்” என உறுதி அளித்தார்.


