Homeசெய்திகள்அரசியல்எஸ்.ஐ.ஆர். மூலம் ஆட்சிக்கு வந்த கட்சி தவெக: தேர்தல் ஆணையத்தை ஒருபோதும் எதிர்க்க மாட்டார் முதல்வர்...

எஸ்.ஐ.ஆர். மூலம் ஆட்சிக்கு வந்த கட்சி தவெக: தேர்தல் ஆணையத்தை ஒருபோதும் எதிர்க்க மாட்டார் முதல்வர் விஜய்!

-

- Advertisement -

என்.கே.மூர்த்தி

இந்தியத் தேர்தல் ஆணையம் அமல்படுத்திய ‘வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை’ (SIR) விவகாரம் தேசிய அளவிலும் தமிழக அரசியலிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக வலுவான குரல் எழுப்ப மறுப்பது ஏன் என்பது குறித்த அனல் பறக்கும் விவாதங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

we-r-hiring

“எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையால் பயனடைந்து ஆட்சிக்கு வந்ததே தவெகதான்; எனவே தேர்தல் ஆணையத்தை முதல்வர் விஜய் ஒருபோதும் வெளிப்படையாக எதிர்க்க மாட்டார்” என்ற அதிரடி குற்றச்சாட்டு தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

எஸ்.ஐ.ஆர் பின்னணியும் தவெகவின் வெற்றியும்

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. படிவம் 6-ல் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் கோடிக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவு வாக்குகள் முறையின்றி நீக்கப்பட்டதாகப் புகார்கள் வலுத்து வருகின்றன.
இந்தச் சூழலில், தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் நடைமுறையால் அதிகம் பாதிக்கப்பட்ட தொகுதிகளின் தரவுகளைக் சுட்டிக்காட்டும் அரசியல் விமர்சகர்கள் மற்றும்

கூட்டணிக் தலைவர்கள், தவெகவின் வெற்றிக்கு இந்த வாக்கு நீக்கங்களே பிரதான காரணியாக அமைந்தன என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
* குறைந்த வாக்கு நீக்கம் (10,000-க்கும் கீழ்): தவெக மிகக் குறைந்த இடங்களிலேயே வெற்றி பெற்றது.

* அதிக வாக்கு நீக்கம் (50,000 முதல் 80,000க்கும் மேல்): 50,000-க்கும் அதிகமான வாக்குகள் நீக்கப்பட்ட பெரும்பாலான தொகுதிகளிலும், 80,000-க்கும் அதிகமான வாக்குகள் நீக்கப்பட்ட அனைத்துத் தொகுதிகளிலுமே தவெக அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த வெற்றிச் சமன்பாடே, தேர்தல் ஆணையத்தின் மீதான விமர்சனங்களில் முதல்வர் விஜய் அமைதி காப்பதற்கு முக்கியக் காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது.

திருமாவளவனின் கணிப்பும் கார்கேவின் அதிரடியும்
வி.சி.க தலைவர் திருமாவளவன் இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையில், “தமிழ்நாட்டில் மும்முனைப் போட்டி உருவாவதற்கும், த.வெ.க வெற்றிபெற்று ஆட்சியமைப்பதற்கும் எஸ்.ஐ.ஆர் நடைமுறையே முக்கியக் காரணமாக இருந்திருக்க வாய்ப்புள்ளது” என வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
அதேபோல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, “எஸ்.ஐ.ஆருக்குப் பிறகு நடந்த தேர்தல்கள் செல்லாது; சட்டவிரோதமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவைகளைக் கலைக்க வேண்டும்” எனக் கூறி, தவெக அரசுக்கே எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

மௌனம் காக்கும் முதல்வர் விஜய்: கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி
டெல்லியில் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டபோதும், நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தபோதும் முதல்வர் விஜய் நேரடி கண்டனங்களையோ அறிக்கைகளையோ வெளியிடவில்லை. தவெகவின் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இடப்பெற்ற ஒரு எளிய பதிவோடு இந்த விவகாரம் கடந்து செல்லப்பட்டது.

இது குறித்துக் அதிருப்தி தெரிவிக்கும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்:

“மத்திய பா.ஜ.க அரசின் தயவாலும், தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையாலும்தான் தவெக ஆட்சிக்கட்டிலில் அமர முடிந்தது. பா.ஜ.க எதிர்ப்பில் தவெகவுக்கு எப்போதுமே தெளிவான நிலைப்பாடு இருந்ததில்லை. பா.ஜ.க பெயரைக் கேட்டாலே பேரவையில் அமைச்சர்களும் சபாநாயகரும் பதறுகின்றனர். இந்தச் சூழலில், தங்களுக்கு மறைமுகமாக உதவிய தேர்தல் ஆணையத்தை முதல்வர் விஜய் எப்படி எதிர்ப்பார்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கின்றனர்.

அரசியல் கணக்குகளும் எதிர்கால கேள்விகளும்

திராவிடக் கட்சிகளை வீழ்த்தி தமிழகத்தில் புதிய அரசியல் களம் அமைக்க நினைக்கும் சக்திகளுக்குத் தவெகவின் இந்த வெற்றி சாதகமாக அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் முதல்வர் விஜய் தொடர்ந்து காத்து வரும் மௌனம், தவெக அரசு மீதான ‘பா.ஜ.க ஆதரவு’ சந்தேகங்களை மேலும் வலுக்கச் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் வேளையில், தவெகவின் இந்த ‘மூலோபாய மௌனம்’ தமிழக அரசியலில் மேலும் பல திருப்பங்களுக்கு வழிவகுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தாராபுரம் இடைத்தேர்தல்: 20-வது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை!

MUST READ