
ஒருமித்த கருத்துடைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களோடு விரைவில் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்கிய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்!
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் நேரில் சந்தித்துப் பேசினார். கடந்த ஒன்றரை மாதங்களில் நிகழும் இரண்டாவது சந்திப்பு இது. மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது, தேர்தல் வியூகங்கள் வகுப்பது உள்ளிட்டவைக் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்புக்கு பின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கே, “தேசம் மீண்டும் ஒருங்கிணைப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ரூபாய் 2,000 நோட்டுகளை இன்று முதல் மாற்றிக் கொள்ளலாம் என அறிவிப்பு!
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், “விரைவில் ஒருமித்த கருத்துடைய எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறும். ஓரிரு நாட்களில் அதற்கான தேதி மற்றும் இடம் அறிவிக்கப்படும” எனத் தெரிவித்துள்ளார்.


