சூப்பர் ஸ்டாரின் தர்மன் படத்தில் பிரபல நடிகை இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் தர்மன். சூப்பர் ஸ்டாரின் 173 வது படமான இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினி மருத்துவர் இடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். ரசிகர்களைக் கவரும் வண்ணம் மாஸான ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் தயாராகும் இப்படத்தில், மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ளது. இதில் நயன்தாரா, சிம்ரன், ராஷி கண்ணா மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், ‘தர்மன்’ திரைப்படக் குழுவினர் நடிகை ஸ்ரீலீலாவின் பிரத்யேக ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு நடிகை ஸ்ரீலீலா இந்த படத்தில் இணைந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். திரையில் தனது துள்ளலான எனர்ஜியாலும், அசாத்திய நடனத்திறமையாலும் ரசிகர்களைக் கவரும் ஸ்ரீலீலாவின் இந்த புதிய ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் கோலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் ஸ்ரீலீலாவிற்கு இந்த படம் நல்ல பெயரை பெற்று தரும் என்று நம்பப்படுகிறது.
SHE’S GOT THE SPARK
SHE’S GOT THE PATAKA
Welcoming the gorgeous @sreeleela14 to DHARMAN#Dharman #KettaPaiyanSir
#SuperstarRajinikanth #KamalHaasan@rajinikanth @ikamalhaasan #Mahendran #Nayanthara @Dir_Ashwath @anirudhofficial @anbariv @iYogiBabu @SimranbaggaOffc @sreeleela14 #RaashiKhanna @nikethbommi #KarthikRajkumar @PradeepERagav @kabilanchelliah @ShruthiManjari @APIfilms @homescreenent @saregamasouth @RKFI @turmericmediaTM @magizhmandram
— Raaj Kamal Films International (@RKFI) November 4, 2026

அதே சமயம் பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு வரலாற்று சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
