- Advertisement -
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களுக்கு நாளை (நவம்பர் 6) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே திங்கள்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றங்களின் வழக்கமான பணிகள் நடைபெறாது.

தொடர்ந்து, நவம்பர் 10-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்கள் மீண்டும் வழக்கம்போல் செயல்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
