Homeசெய்திகள்தமிழ்நாடுஒப்பந்ததாரர்களிடம் நான் 20% கமிஷன் வாங்குகிறேனா – தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி...

ஒப்பந்ததாரர்களிடம் நான் 20% கமிஷன் வாங்குகிறேனா – தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி தவெக எம்.எல்.ஏ. புகார்!

-

- Advertisement -

ஒப்பந்ததாரர்களிடம் 20 சதவீதம் கமிஷன் பெறுவதாகத் தன்னைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறி, அவ்வாறு தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை ராணி நாச்சியார் புகார் அளித்துள்ளார்.ஒப்பந்ததாரர்களிடம் நான் 20% கமிஷன் வாங்குகிறேனா – தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி தவெக எம்.எல்.ஏ. புகார்!

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தவெக எம்.எல்.ஏ. குழந்தை ராணி நாச்சியார், தன்னைப் பற்றி சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

குறிப்பாக, ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 20 சதவீதம் கமிஷன் பெறுவதாகக் கூறப்படும் தகவல்கள் தன்னைப் பற்றிய அவதூறான செய்தி என அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த அவர், ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புபவர்கள் யார் என்பதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குழந்தை ராணி நாச்சியார், “ஒப்பந்ததாரர்களிடம் நான் 20 சதவீதம் கமிஷன் வாங்குகிறேனா?” என்று கேள்வி எழுப்பி, தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பரபரப்பாகப் பேசியுள்ளார்.

தன்னைப் பற்றிய தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறி ஆளும் தவெக சட்டமன்ற உறுப்பினர் காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் சிவகங்கை அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் புதுக்கோட்டை வருகை தோல்வி; மக்களை ஏமாற்றிய விசிட் – முன்னாள் அமைச்சர் ரகுபதி விமர்சனம்!

MUST READ