- Advertisement -
வண்ண ஒளிகளின் திருவிழாவான தீபாவளித் திருநாளை முன்னிட்டு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் தீபாவளியைக் கொண்டாடும் மக்களுக்கு தனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டிலும் உலகின் பிற பகுதிகளிலும் தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் தனது மனமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் தற்போது எதிர்கொண்டு வரும் வறட்சி, வேலையின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளும் தீபாவளித் திருநாளுடன் நீங்கி, மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருக வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
