தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என எல்லை தாண்டி சாதனை படைத்து வரும் தனுஷ் தற்போது தனது 55வது படமான ஓம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
‘அமரன்’ திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியிருப்பதால், ஆரம்பம் முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்து வருகிறது.
வரும் நவம்பர் 20-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது. அதற்கான இறுதிக்கட்டப் பணிகளும் புரொமோஷன் நிகழ்வுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தனுஷுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரும் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ட்ரெண்டான நிலையில், படத்தைத் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவின் மேடையில் பேசிய நடிகர் தனுஷ், படத்தின் நட்சத்திரங்கள் குறித்துப் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்.
#Dhanush Recent
– Every great star seated here, it’s not easy to get a yes from them. Be it #Mammootty, lady superstar #SaiPallavi, or #Sreeleela, it’s very hard to get a yes from them. But after knowing their characters, they said okay to it.
– We have solid characters, and we hope they will reach the audience. We have worked very hard for this film.
#OM https://t.co/0YZAtPWhdM— Movie Tamil (@_MovieTamil) November 17, 2026
அப்போது பேசிய அவர், “இங்கே அமர்ந்திருக்கும் ஒவ்வொரு பெரிய நட்சத்திரத்திடமும் கால்ஷீட் வாங்கி சம்மதம் பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. மம்மூட்டி சாராக இருந்தாலும் சரி, ‘லேடி பவர் ஸ்டார்’ சாய் பல்லவியாக இருந்தாலும் சரி, அல்லது ஸ்ரீலீலாவாக இருந்தாலும் சரி, அவர்களிடம் ‘ஓகே’ வாங்குவது மிகவும் கடினம். ஆனால், இந்தப் படத்தில் அவர்களுடைய கதாபாத்திரங்களின் வலிமையைத் தெரிந்து கொண்ட பிறகுதான் அவர்கள் நடிக்கச் சம்மதித்தார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தனுஷ், “இந்தப் படத்தில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரங்கள் அமைந்துள்ளன. அவை நிச்சயம் ரசிகர்களைச் சென்றடையும் என நம்புகிறோம். இந்தப் படத்திற்காக நாங்கள் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளோம்” என்றும் கூறினார். தெலுங்கு மேடையில் சாய் பல்லவியைப் பார்த்து ‘லேடி பவர் ஸ்டார்’ என தனுஷ் அழைத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் கரகோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
