இயக்குனர் சுசீந்திரன் விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தை பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகத் தனது பயணத்தைத் தொடங்கி, தற்போது கதாநாயகனாக அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருபவர் விஜய் ஆண்டனி. இவர் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் தனித்துவமான மற்றும் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் இவர், இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் ‘அப்பா குட்டி’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். தந்தை – மகள் இருவருக்கும் இடையேயான அழகான பாசப் போராட்டத்தையும் உணர்வுபூர்வமான தருணங்களையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனி நடித்துள்ள இப்படத்தை அவரே தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், படத்திற்கு இசையமைத்தும் உள்ளார். மேலும், இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து பிரீத்தி அஸ்ராணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ‘அப்பா குட்டி’ திரைப்படத்தைப் பார்த்த பிரபல இயக்குநர் சுசீந்திரன், படம் குறித்துப் பாராட்டி பேசியுள்ளார்.
Dir Suseenthiran appreciates Vijay Antony’s #Appakutty 💥 https://t.co/DfCKt7EohH
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 17, 2026
அவர் கூறுகையில், “இது ஒரு மிகச்சிறந்த திரைப்படம். இப்படத்தின் திரைக்கதை மிகவும் சுவாரஸ்யமாக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, படத்தின் இரண்டாம் பாதி மிகவும் ஸ்டன்னிங்காக இருக்கும். டூரிஸ்ட் ஃபேமிலி படம் போல, படம் முழுக்க ரசிகர்களைக் கட்டிப்போடும் வகையில் எங்கேஜிங்காக இப்படம் நகரும். இந்தத் திரைப்படம் நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும். குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று பாருங்கள்” என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்த நிலையில் சுசீந்திரனின் இந்த பாராட்டும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
