spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்திமுக - பாஜகவிற்கு இடையே பிரச்சனை இல்லை - அண்ணாமலை ...

திமுக – பாஜகவிற்கு இடையே பிரச்சனை இல்லை – அண்ணாமலை There is no problem between DMK and BJP – Annamalai

-

- Advertisement -

கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அந்த காட்சிகள் உடனடியாக எதிர்த்து கண்டன குரல் கொடுத்து அன்னூர் சென்ற விவசாய பெருமக்களை சந்தித்து இதை வன்மையாக கண்டித்தது மட்டுமல்லாமல் விவசாய பெருமக்களோடு இணைந்து ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை பாரதி ஜனதா கட்சி அங்கு நடத்தியது.

திமுக - பாஜகவிற்கு இடையே பிரச்சனை இல்லை - அண்ணாமலை

”விவசாய பெருமக்கள் எல்லாரும் வந்தாங்க நாங்களும் கட்சி சார்பாக உறுதிமொழி கொடுத்திருந்தோம். எங்களைத் தாண்டி விவசாய பெருமக்களுடைய நிலத்தை எடுப்பதற்கு ஆளும் கட்சி வந்தால் உண்ணாவிரதத்திஎத்தனை நாட்களாக இருந்தாலும் அமர்வதற்கு தயார்” என்று அண்ணாமலை பேசினார்.

we-r-hiring

அதன் பிறகு மாநில அரசின் G.O. ன் படி 3862 ஏக்கர் நிலத்தில் 1630 ஏக்கர் தரிசு நிலம் என்று செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த 1630 ஏக்கர் தரிசு நிலத்தை ஏற்கனவே வெவ்வேறு தனியார் நிறுவனங்கள் வாங்கியுன்னதாகவும் ,அதில் 1330 ஏக்கர் தரிசு நிலத்தை டிட்கோ (TIDCO) நிறுவனம் எடுத்துக் கொள்ளும் என்றார்.

விவசாய பெருமக்கள் அவர்களாக முன் வந்து கொடுத்தால் அந்த நிலத்தை ஏற்றுகொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை பாஜக வரவேற்றது என்றும் குறிப்பிட்டார். அதன் காரணம் விவசாய நிலங்கள் அனைத்திடங்களிலும் அழிந்து கொண்டிருக்கிறது என பேசினார். 3862 ஏக்கரில் வெறும் 1630 ஏக்கர் மட்டுமே தரிசு நிலம் என்று மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக கூறினார். இந்நிலையில் 2100 ஏக்கர் விவசாய நிலத்தை அவர்கள் எடுத்துள்ளதாக உறுதி செய்திருக்கின்றார்.அந்த நிலங்கள் அனைத்தும் பவானிசாகர் அணையில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகவும் அத்திகடவுர் அவினாசி தண்ணீர் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொழிற்சாலைகள் வரவேண்டும் விவசாயத்தை அழித்து அல்ல என்று கூறினார். தமிழகத்தில் ஏற்கனவே 48,000 ஏக்கர் தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் இருக்கிறது. அதற்கு இண்டஸ்ட்ரியல் லேண்ட் என்று குறியீடு போட்டு மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அந்த இண்டஸ்ட்ரியல் லேண்ட் இடத்தில் நிறைய வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளை உருவாக்கணும் என்றார். அதைத்தான் பாஜக இந்த நேரத்தில் விவசாய பெருமக்கள் எல்லோருக்குமே தெரிவித்துக்கொள்கிறது.

There is no problem between DMK and BJP - Annamalai

விவசாய பெருமக்கள் பாரதி ஜனதா கட்சிக்கு கடந்த சில நாட்களாக தொடர்பு கொண்டு இருக்கிறார்கள். அதனால் எங்களுடைய விவசாய அணி தலைவர் அண்ணன் ஜி.கே. நாகராஜன் அவர்கள் இரண்டு நாட்களில் குறிப்பாக திங்கட்கிழமை அன்று விவசாய பெருமக்களுக்கு நன்றி சொல்லி அவர்களுக்கு கிடைத்த வெற்றி தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு விவசாய பெருமகனுக்கும் கிடைத்த ஒரு வெற்றி என்றார். ஒரு அரசு தான் போட்டிருக்கக் கூடிய G.O.வில் இருக்க கூடிய தவறை உணர்ந்து கொண்டு அதை திருத்தம் செய்திருக்கின்றார்கள். அதனால் விவசாய பெருமக்கள் அனைவருக்கும் குறிப்பாக நம்மோடு போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாய சங்க தலைவர்கள், அரசியல் சாராத நிறைய விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்றார்கள். எல்லோருக்கும் இந்த நேரத்தில நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று அண்ணாமலை தெரிவித்தார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக தனது தேர்தல் அறிக்கையில் நிலம் இல்லாத விவசாய பெருமக்களுக்கு நிலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிகக்காட்டினார். நிலம் இல்லாத அனைவருக்குமே இரண்டு ஏக்கர் நிலத்தை கொடுக்கிறோம் என்று 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார். அதற்கு எப்பொழுதுமே பாரதிய ஜனதா கட்சியினுடைய ஆதரவு இருக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதனை ஒரு போராட்டமாக இன்று அவர்கள் விவாதித்தால் திமுக அதனை ஒப்பு கொண்டுதான் ஆக வேண்டும் என்று அண்ணாமலை பேசினார்.

MUST READ