Homeசெய்திகள்தமிழ்நாடுபிரதமர் மோடி முன்னிலையிலேயே காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் தொடர்ந்து பொய் சொல்கிறார் – துரை...

பிரதமர் மோடி முன்னிலையிலேயே காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் தொடர்ந்து பொய் சொல்கிறார் – துரை வைகோ குற்றச்சாட்டு; எம்எல்ஏவுக்கு ரூ.40 கோடி வரை பேரம் பேசப்படுவதாகவும் விமர்சனம்!

-

- Advertisement -

காவிரி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற மேடையிலேயே கர்நாடக முதல்வர் தொடர்ந்து பொய்யான தகவல்களைத் தெரிவித்து வருவதாக மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.பிரதமர் மோடி முன்னிலையிலேயே காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் தொடர்ந்து பொய் சொல்கிறார் – துரை வைகோ குற்றச்சாட்டு; எம்எல்ஏவுக்கு ரூ.40 கோடி வரை பேரம் பேசப்படுவதாகவும் விமர்சனம்!

மேலும், தமிழக அரசியல் சூழல், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தொடர்பான சர்ச்சை மற்றும் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என யார் தவறு செய்திருந்தாலும், ஆட்சியில் இருப்பவர்கள் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தொடர்பான விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய்யே கூறியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ரூ.40 கோடி வரை பேரம் பேசப்படுவதாகக் குற்றம்சாட்டிய துரை வைகோ, திமுக தலைமை குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் விமர்சித்துள்ளார்.

இதற்கிடையே, காவிரி விவகாரத்தில் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பேசி வருவதாகவும், பிரதமர் மோடி பங்கேற்ற மேடையிலேயே இதுபோன்ற கருத்துகளை அவர் தெரிவிப்பதாகவும் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

வைகோவின் அரசியல் நிலைப்பாட்டைச் சாடிய வள்ளம் பஷீர்: தவெகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகப் பரபரப்புக் குற்றச்சாட்டு!

MUST READ