Homeசெய்திகள்தமிழ்நாடுஅரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ உணவு – ஓராண்டுக்கு விநியோகம் செய்ய...

அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ உணவு – ஓராண்டுக்கு விநியோகம் செய்ய TNMSC ஒப்பந்தம் வெளியீடு!

-

- Advertisement -

அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிறப்பு மருத்துவ உணவுகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் (TNMSC) நடவடிக்கை எடுத்துள்ளது.அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ உணவு – ஓராண்டுக்கு விநியோகம் செய்ய TNMSC ஒப்பந்தம் வெளியீடு!

இதற்காக, சிறப்பு மருத்துவ உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்து அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்வதற்கான மறுஒப்பந்தப் புள்ளியை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, பிறவியிலேயே ஏற்படும் மரபணு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகளால் பாதிக்கப்படும் சில குழந்தைகளால் சாதாரண உணவுகளை உட்கொள்ள முடியாது. உணவில் உள்ள குறிப்பிட்ட புரதச் சத்துகளை உடலால் சரியாகச் செரிக்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாத நிலை இவர்களுக்கு ஏற்படலாம். இதுபோன்ற குழந்தைகளுக்கு மருத்துவர்களின் பரிந்துரைப்படி பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் சிறப்பு மருத்துவ உணவுகள் வழங்கப்படுகின்றன.

அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான உணவுகள் முறையாகக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அடுத்த ஓராண்டுக்குச் சிறப்பு மருத்துவ உணவுப் பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தைத் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே, ஹீமோபிலியா ஏ எனப்படும் ரத்தம் உறையாமை உள்ளிட்ட அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும், அதிக விலை கொண்ட எமிசிசுமாப் ஊசி மருந்தை அரசு மருத்துவமனைகள் மூலம் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக 1,800 குப்பிகளைக் கொள்முதல் செய்யவும் TNMSC ஒப்பந்தம் வெளியிட்டுள்ளது. இந்த மருந்தின் ஒரு குப்பியின் விலை சுமார் ரூ.2 லட்சம் வரை இருக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், அரிய வகை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு மருத்துவ உணவுகளையும் தடையின்றி வழங்குவதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்குத் தேவையான சிறப்பு உணவுகள் மற்றும் விலை உயர்ந்த மருந்துகள் தட்டுப்பாடின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய TNMSC நடவடிக்கை எடுத்துள்ளது.

செம்மஞ்சேரியில் 124 ஏக்கரில் ஒலிம்பிக் நகரம் – விளையாட்டு உட்கட்டமைப்பு மாஸ்டர் பிளான் தயாரிக்க தமிழக அரசு டெண்டர்!

MUST READ