Homeசெய்திகள்மாவட்டம்சாலையை ஆக்கிரமித்ததாகப் புகார்: அயப்பாக்கம் சுந்தர விநாயகர் ஆலயத்தை இடிக்கும் அதிகாரிகள்!

சாலையை ஆக்கிரமித்ததாகப் புகார்: அயப்பாக்கம் சுந்தர விநாயகர் ஆலயத்தை இடிக்கும் அதிகாரிகள்!

-

- Advertisement -

திருவள்ளூர் மாவட்டம், அயப்பாக்கம் வி.ஜி.என். குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள சுந்தர விநாயகர் ஆலயம், சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி இடிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கோயில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாக சீனிவாசன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கோயிலை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோயிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தர்ணா

கோயிலை இடிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அப்பகுதி மக்கள், கோயில் வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், பொதுமக்களை வெளியேற்ற முயன்றனர்.

அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கும் பணி

வில்லிவாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வசுந்தரி தலைமையில் வருவாய்த் துறை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலையில் கோயிலை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், ஆவடி உதவி ஆணையர் சம்பத் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு கோயிலை இடிக்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பத்திரப்பதிவுத் துறை தனியார்மயமாக்கல்: 20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி – ஆவடியில் 300-க்கும் மேற்பட்ட பத்திர எழுத்தர்கள் போராட்டம்!

MUST READ