Homeசெய்திகள்மாவட்டம்கார்த்திகை தீபத் திருவிழா: பர்வதமலை ஏற 1,200 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி – காலை 5...

கார்த்திகை தீபத் திருவிழா: பர்வதமலை ஏற 1,200 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி – காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனுமதி!

-

- Advertisement -

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, பர்வதமலையில் ஏறி சுவாமி தரிசனம் செய்ய 1,200 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கார்த்திகை தீபத் திருவிழா: பர்வதமலை ஏற 1,200 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி – காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அனுமதி!

இதன்படி, தீபத் திருநாளன்று காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் 150 பக்தர்கள் வீதம் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பர்வதமலைக்குச் சென்று கார்த்திகை தீபத் தரிசனம் செய்யத் திட்டமிடும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மகா தீப தரிசனத்திற்கு கட்டண முறை ரத்து – 3,000 பக்தர்களுக்கு இலவச அனுமதி; இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு!

MUST READ