Homeசெய்திகள்தமிழ்நாடுகருகும் பயிர்கள்.. Silent Mode-இல் CM..! “விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல” - மு.க.ஸ்டாலின்..

கருகும் பயிர்கள்.. Silent Mode-இல் CM..! “விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல” – மு.க.ஸ்டாலின்..

-

- Advertisement -


காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க முதலமைச்சர் உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

விவசாயிகள் எதிர்கொண்டு வரும் நெருக்கடிகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கியக் குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகள்:

சாகுபடி சரிவும், விவசாயிகளின் தவிப்பும்:

  • காவிரியில் 11 டி.எம்.சி. (TMC) தண்ணீர் கோரித் தமிழக அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  • இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94 சதவீதம் வரை சரிந்துள்ளதாகவும், தற்போது சம்பா பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • “குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள முதலமைச்சரின் பதில் என்ன?” என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
    “காவிரியில் தண்ணீர் திறக்க என்ன பிரச்சனை?” - கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி!

முதலமைச்சருக்கு முன்வைக்கப்பட்ட 4 முக்கியக் கேள்விகள்: விவசாயிகளின் தற்போதைய நிலை குறித்துத் தமிழக அரசுக்கு அவர் நான்கு கேள்விகளை எழுப்பியுள்ளார்:

  1. காவிரி நீருரிமையை நிலைநாட்ட அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

  2. கருகும் சம்பா பயிர்களைக் காப்பாற்றுவதற்கான திட்டம் என்ன?

  3. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் எப்போது வழங்கப்படும்?

  4. விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது அறிவிக்கப்படும்?

அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்ட வலியுறுத்தல்: விவசாயிகளின் கண்ணீரைவிடத் தனிப்பட்ட ஈகோ (Ego) பெரிதல்ல என்று குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், பொறுப்புகளைத் தட்டிக்கழிக்காமல் முதலமைச்சர் உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். அக்கூட்டத்தில் உரிய தீர்மானங்களை நிறைவேற்றி, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முதல்வரை ‘கூத்தாடி’ எனப் பேசிய நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் மீதான வழக்கு ரத்து – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

MUST READ