சூர்யா 50 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் முன்னதாக வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் சறுக்கலை சந்தித்தாலும், 2026-ஆம் ஆண்டில் அந்தச் சூழலை முற்றிலுமாக மாற்றி மாஸ் கம்பேக் கொடுத்துள்ளார் சூர்யா. ‘கங்குவா’, ‘விஸ்வநாத்அண்ட் சன்ஸ்’, ‘சீன்’ ஆகிய மூன்று படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக ‘சீன்’ திரைப்படம் உலக அளவில் அதிக அளவில் வசூலை வாரிக் குவித்து வருகிறது. சமீபத்தில் பல புதிய படங்கள் வெளியான போதிலும், ‘சீன்’ படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு இனிவரும் நாட்களில் மேலும் அதிக வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் தற்போது டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் ‘சூர்யா 48’ படத்தில் நடித்து வரும் சூர்யா, அதனைத் தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘சூர்யா 49’ படத்தில் நடிக்கவுள்ளதாகக் கிட்டத்தட்ட உறுதியான தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இதற்கிடையில், ‘சூர்யா 50’ படம் ‘கருப்பு’ படத்தின் சீக்குவலாக இருக்கும் என சமீபத்தில் பேசப்பட்டு வந்தது.
ஆனால் அதே சமயம், மதிமாறன் புகழேந்தி ‘சூர்யா 50’ படத்தை இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, மதிமாறன் புகழேந்தி தான் ‘சூர்யா 50’ படத்தை இயக்கப் போவதாகவும், இப்படத்தைத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
