Homeசெய்திகள்சென்னைபல்லாவரத்தில் நரிக்குறவர் இளைஞரை கட்டிவைத்து மிளகாய்த்தூள் தூவி தாக்குதல் – வீடியோ சமூக வலைதளங்களில் பரவி...

பல்லாவரத்தில் நரிக்குறவர் இளைஞரை கட்டிவைத்து மிளகாய்த்தூள் தூவி தாக்குதல் – வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சி!

-

- Advertisement -

சென்னை பல்லாவரத்தில் திருமணமான பெண்ணுடன் சென்றதாகக் கூறி, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை அதே சமூகத்தைச் சேர்ந்த சிலர் கட்டிவைத்து மிளகாய்த்தூள் தூவி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பல்லாவரத்தில் நரிக்குறவர் இளைஞரை கட்டிவைத்து மிளகாய்த்தூள் தூவி தாக்குதல் – வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சி!

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தகவலறிந்த பல்லாவரம் போலீசார், தாக்குதலில் காயமடைந்த இளைஞரை மீட்டு தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த பவானி (20) என்ற திருமணமான பெண் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தினர் பஞ்சாயத்து கூட்டி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, பூந்தமல்லியைச் சேர்ந்த ஏற்கெனவே திருமணமான டேவிட் (21) என்பவருடன் பவானி சென்றிருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனக் கூறி, நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் தாங்களாகவே தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், டேவிட் இருக்கும் இடத்தைத் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என வாட்ஸ்அப் குழுவில் அறிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில், டேவிட் மற்றும் பவானி இருவரும் பெங்களூருவில் இருப்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு சென்ற பல்லாவரத்தைச் சேர்ந்த சிலர் இருவரையும் பிடித்து வந்து நரிக்குறவர் காலனியில் வைத்துள்ளனர்.

அப்போது, திருமணமான பெண்ணின் வாழ்க்கையில் ஏன் தலையிட்டாய் எனக் கேட்டு, டேவிட்டை பலர் சேர்ந்து கட்டிவைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும், அவர் மீது மிளகாய்த்தூள் தூவியும், தண்ணீர் ஊற்றியும் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. பவானியையும் சிலர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்தவர்கள், அதனை பூந்தமல்லியில் உள்ள டேவிட்டின் உறவினர்களுக்கு அனுப்பி, அவர்களையும் பஞ்சாயத்துக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

இதற்கிடையே, சம்பவம் குறித்து தகவலறிந்த பல்லாவரம் போலீசார் அங்கு சென்று டேவிட்டை மீட்டுள்ளனர்.

பின்னர், அவர் தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பத்தூரில் 27 வயது இளைஞர் தூக்கிட்டு உயிரிழப்பு: உறவினர்களுக்கு கடைசியாக அனுப்பிய வாட்ஸ்அப் தகவலால் அதிர்ச்சி!

MUST READ