தனுஷின் D56 பட ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் ‘ஓம்’ திரைப்படம் வெளியாகி, உலக அளவில் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி நடை போட்டு வருகிறது. அதே சமயம், தனுஷ் தற்போது ‘லப்பர் பந்து’ பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தன்னுடைய 56-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘D56’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, உறியடி விஜயகுமார், வடிவேலு, ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 25 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படப்பிடிப்பில் தனுஷ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடிக்கும் முக்கியமான காட்சிகளும், அதிரடியான சண்டைக் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படத்திற்கு ஓம் பிரகாஷ் புதிய ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு கிராமத்து மாஸ் என்டர்டெய்னராக உருவாகி வரும் ‘D56’ திரைப்படத்தை 2027 கோடை விடுமுறையில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. இதற்கிடையில் ‘ஓம்’ பட விழாவின் போது நடிகர் தனுஷ், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தான் நடிக்கும் D56 படம், தனக்கு மிகவும் ஸ்பெஷலான படம் என்று கூறியிருந்தார். மேலும் இந்த படம் ஒரிஜினல் ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
