மணிரத்னம் – விஜய் சேதுபதி கூட்டணியின் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்புகளைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் மணிரத்னம். இவர் கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதே சமயம் பல ட்ரோல்களுக்கும் உள்ளானது. எனவே, இதற்கு அடுத்து எப்படியாவது ஒரு தரமான கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் மணிரத்னம் அடுத்த படத்தைக் கையில் எடுத்திருக்கிறார். அந்தப் படம்தான் ‘இஞ்சி வெல்லம்’.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கிறார். ஏற்கனவே மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருந்த நிலையில், இரண்டாவது முறையாக ‘இஞ்சி வெல்லம்’ படத்தில் இணைந்திருக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து சாய் பல்லவி, சைத்ரா ஆச்சர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். அவிக் முகோபாத்யாய் ஒளிப்பதிவு செய்கிறார்.
The first single from #InjiVellam has a name ❤️🔥
#AachiAachi drops tomorrow 🎵
Puyalism begins before birth 🎧
#ManiRatnam @arrahman @MadrasTalkies_ #Subaskaran @LycaProductions @VijaySethuOffl @Sai_Pallavi92 @sreekar_prasad #AvikMukhopadhayay @ekalakhani #SharmishtaRoy @Chaithra_Achar_ @BrindhaGopal1 @dhilipaction @AmbadyRanjith @bagapath @gkmtamilkumaran @sonymusicsouth @NetflixIndia @homescreenent @sst_casting @gopiprasannaa @SureshChandraa @DoneChannel1
#InjiVellamFromJan29
— Lyca Productions (@LycaProductions) November 24, 2026
மெட்ராஸ் டாக்கீஸ், லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் இந்தியா டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்திருக்கின்றன. ஏற்கனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில், படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. மேலும், சமீபத்தில் இந்தப் படம் 2027 ஜனவரி 29-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடல் நாளை (நவம்பர் 25) வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
