கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்: எம்.எல்.ஏ. மீதான வழக்கில் விசாரணை தொடக்கம் – மகளிர் காவல் நிலையத்தில் கூடுதல் ஏற்பாடுகள்!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சிருஷ்டி சிங், இன்று காலை தனது விசாரணையைத் தொடங்கியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விசாரணைக்கு வருபவர்கள் அமர்வதற்காகப் புதிதாக ஆறு நாற்காலிகள் மற்றும் இரண்டு மேஜைகள் காவல் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையில் நடைபெற உள்ள விசாரணையில், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வழக்கில் தொடர்புடைய சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
