Homeசெய்திகள்மாவட்டம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: விஜய் அரசைக் கண்டித்து காதில் பூ வைத்தும், கும்மியடித்தும் விவசாயிகள் நூதனப்...

பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: விஜய் அரசைக் கண்டித்து காதில் பூ வைத்தும், கும்மியடித்தும் விவசாயிகள் நூதனப் போராட்டம்!

-

- Advertisement -

தேர்தல் வாக்குறுதியின்படி பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யவில்லை எனக் குற்றம்சாட்டி, தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசைக் கண்டித்து திருவள்ளூரில் விவசாயிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: விஜய் அரசைக் கண்டித்து காதில் பூ வைத்தும், கும்மியடித்தும் விவசாயிகள் நூதனப் போராட்டம்!

காதில் பூ வைத்துக்கொண்டும், விசில் அடித்தும், கும்மியடித்தும் அவர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

திருவள்ளூர் பஜார் வீதியில் பல்வேறு விவசாய சங்கங்களின் சார்பில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

அப்போது, தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.50 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்றும், சிறு விவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் தள்ளுபடி என்றும் அறிவிக்கப்பட்டது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறினர்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், அடுத்த அறிவிப்பில் ரூ.75 ஆயிரம் வரை கடன் பெற்ற சிறு, குறு விவசாயிகளுக்கு முழுமையான கடன் தள்ளுபடியும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாக விவசாயிகள் சுட்டிக்காட்டினர். இந்த அறிவிப்பு தங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை எவ்வித நிபந்தனையும் இன்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று திருவள்ளூர் பஜார் வீதியில் நூதனப் போராட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற விவசாயிகள் காதில் பூ வைத்துக்கொண்டு, விசில் அடித்தும், கண்டன முழக்கங்களை எழுப்பியும், கும்மியடித்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பஜார் வீதியில் பேரணியாகச் செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி புருஷோத்தமன், பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்.

பயிர்கள் கருகியதால் விவசாயிகள் வேதனை – ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி மீமிசலில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

MUST READ