
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பள்ளிப் பைகள் திட்டத்தின் கீழ், 2027–2028-ஆம் கல்வி ஆண்டுக்கான கொள்முதல் டெண்டரைத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு ₹103.81 கோடி ஆகும்.
கொள்முதல் விவரங்கள் மற்றும் பள்ளிப் பையின் சிறப்பம்சங்கள்:
எண்ணிக்கை மற்றும் பயனாளிகள்: மொத்தம் 55,93,170 பள்ளிப் பைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இவை இலவசமாக வழங்கப்படும்.

வடிவமைப்பு மற்றும் அளவுகள்:
– கலர்: நேவி ப்ளூ + ப்ளூ பீடிங் கொண்ட மாடர்ன் லுக்
– 3 அளவுகள்: சிறியது (Small), நடுத்தரம் (Medium), பெரியது (Large) – வகுப்புக்கு ஏற்ற அளவில்
– *டாப் ஹேண்டில்:* கையில் தூக்க எளிதாக
– ZIP பாஸ்ட்னர்: தரமான ஜிப், எளிதில் பழுதாகாது
– பிரண்ட் பாக்கெட்:* டிபன் பாக்ஸ், பென்சில் பாக்ஸ் வைக்க தனி பாக்கெட்
– பீடிங் அவுட்டர்: பேக்கின் வெளிப்புறம் அழகான டிசைன் – உள்ளே லோகோ: பள்ளிக்கல்வித் துறை லோகோ + தமிழக அரசு லோகோ பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும்

தரக் கட்டுப்பாடு மற்றும் 6 மாத வாரண்டி: துணி, தையல், ஜிப் மற்றும் ஸ்ட்ராப் உள்ளிட்டவை நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இருக்க வேண்டும்; தரக் குறைபாடு இருப்பின் நிராகரிக்கப்படும். ஒவ்வொரு பைக்கும் 6 மாத வாரண்டி கட்டாயமாக்கப்பட்டுள்ளது; பேக் கிழிந்தாலோ, ஜிப் பழுதானாலோ, ஸ்ட்ராப் அறுந்தாலோ, சப்ளை செய்த நிறுவனமே மாற்றிக் கொடுக்க வேண்டும். இதனால் பெற்றோர்களுக்கு எந்த செலவும் இல்லை.

முன்கூட்டிய டெண்டரின் நோக்கம் மற்றும் எதிர்பார்க்கப்படும் பயன்கள்: 2027–2028 கல்வி ஆண்டு தொடங்கும் முதல் நாளிலேயே புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகளுடன் பள்ளிப் பைகளையும் மாணவர்களிடம் சேர்க்கும் வகையில் சுமார் 7 மாதங்களுக்கு முன்பே இந்த டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களிடையே சமத்துவ உணர்வும் உற்சாகமும் ஏற்படுவதுடன், பெற்றோர்களின் பள்ளிப் பை செலவுச் சுமை குறையும்; மேலும், உள்நாட்டுப் பை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் தையல் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

