Homeசெய்திகள்தமிழ்நாடுஉதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை – நீண்ட ஆயுளுடன் மக்கள்...

உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை – நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியைத் தொடர வாழ்த்து!

-

- Advertisement -

திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘வீ த லீடர்ஸ்’ (We The Leaders) அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை முதன்முறையாக அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் முறையாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை – நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியைத் தொடர வாழ்த்து!

நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் தனது மக்கள் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள இறைவனை வேண்டிக்கொள்வதாக அவர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

திமுக தலைவரும், உதயநிதி ஸ்டாலினின் தந்தையுமான மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், அண்ணாமலை முதன்முறையாக உதயநிதி ஸ்டாலினுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

50-வது பிறந்தநாள்: தலைவர்களின் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை – நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்!

MUST READ