spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநீடிக்கும் கலவரம்... விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..... மணிப்பூரில் என்ன நடக்கிறது?

நீடிக்கும் கலவரம்… விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா….. மணிப்பூரில் என்ன நடக்கிறது?

-

- Advertisement -

 

நீடிக்கும் கலவரம்... விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா..... மணிப்பூரில் என்ன நடக்கிறது?
Photo: Union Minister Amitshah Twitter Page

மணிப்பூரில் இந்த மாத தொடக்கத்தில் வெடித்த கலவரம் தொடர்ந்து நீடிப்பதால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்த மாநிலத்தில் முகாமிட்டுள்ளார்.

we-r-hiring

போக்குவரத்து ஊழியர்களுடன் நாளை முத்தரப்பு பேச்சுவார்த்தை

குகி, மெய்ட்டி சமூகத்தினரிடையே தொடர்ந்து வரும் மோதல்கள் காரணமாக, மணிப்பூரில் வெடித்த வன்முறையில் இதுவரை 75 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 40 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக, மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

ராணுவம், அசாம் ரைபிள்ஸ் துணை ராணுவப் பிரிவு மற்றும் மணிப்பூர் காவல்துறையினர் வன்முறையைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்கியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல பகுதிகளில் வீடுகள் தீக்கரையாக்கப்பட்டுள்ளதால், அந்த மாநிலத்தில் நெடுங்காலமாக வசித்து வரும் தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் அமைதி திரும்பாத நிலையில், இம்பால் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வன்முறை வெடித்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வன்முறையில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சுமார் 10,000 ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

‘நான் கடவுள்’ பட பாணியில் சடலத்தின் மீது அகோரி பூஜை- மயானத்தில் திகில்!

மணிப்பூரில் மொத்த மக்கள் தொகையில், 53% அளவுக்கு பெரும்பான்மையாக உள்ள மெய்ட்டி சமூகத்தினர் இம்பால் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனர். குகி மற்றும் நாகா பழங்குடியினர், மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர். குகி, நாகா பழங்குடியினர், மணிப்பூர் மக்கள் தொகையில் சுமார் 40% உள்ளனர்.

மெய்ட்டி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வைத்துள்ள கோரிக்கையை குகி பழங்குடி மக்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். குகி பழங்குடிக்கு தனி மாநிலம் வழங்க வேண்டும் என வலியறுத்தி வரும் நிலையில், அண்மையில் வெளியான உயர்நீதிமன்றத் தீர்ப்புக் காரணமாக, மெய்ட்டி சமூகத்திற்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கப்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக, வன்முறை வெடித்தது என மணிப்பூர் மாநில அரசியல் தலைவர்கள் கருதுகின்றனர்.

இத்தகைய தீர்ப்பு ஏன் வெளியிடப்பட்டது என உச்சநீதிமன்றமும் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிலையில், அமைதியை நிலைநாட்டும் முயற்சியாக மணிப்பூர் மாநிலத்திற்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நான்கு நாட்கள் முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

MUST READ