
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (ஜூன் 19) காலை 10.00 மணி வரை மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரவு முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

விஜயின் லியோ படத்தில் மற்றுமொரு பிரபலம்!
தொடர் மழை காரணமாக, சென்னையில் தாழ்வான பகுதிகளைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பொன்னேரி, செங்குன்றம் உள்ளிட்டப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், சேந்தமங்கலம், நெமிலி, தணிகை, வளர்புறம், போளூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, உள்ளிட்டப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
கார்த்தி- ராஜுமுருகன் கூட்டணியின் ‘ஜப்பான்’… பிரம்மாண்ட செட்டில் படப்பிடிப்பு!
குறிப்பாக, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


