spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவது கேடு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

“பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவது கேடு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

-

- Advertisement -

 

"பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வருவது கேடு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
Photo: TN Govt

திருவாரூர் மாவட்டம், காட்டூர் பகுதியில் 7,000 சதுர அடியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இன்று (ஜூன் 20) மாலை 05.00 மணிக்கு நடைபெற்ற விழாவில், கலைஞர் கோட்டத்தை தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

we-r-hiring

கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

கலைஞர் கோட்டத்தில் இரண்டு திருமண அரங்கங்களும், முத்துவேலர் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகத்தை ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பழமையான தமிழகம் என்ற மாநிலம் இல்லாமல் போய்விடும். பா.ஜ.க.வை மீண்டும் ஆளவிடுவது தமிழுக்கு, தமிழகத்திற்கு, நாட்டிற்கு கேடாக அமையும். தமிழகத்தில் செயல்படுவதைப் போன்று எதிர்க்கட்சிகள் இந்திய அளவிலும், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். வெற்றி பெறுவதற்கு ஒற்றுமை என்பது மிகவும் அவசியம். நாட்டின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவோம்.

“அ.தி.மு.க.வுக்கு உரிய மரியாதை அளிக்க தயாராக இருக்கிறோம்”- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

இந்த நிகழ்ச்சியில், பீகார் மாநிலத்தின் நீர்வளத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சஞ்சய் குமார் ஜா, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, ஐ.பெரியசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரியகருப்பன், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தயாளு அம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன், அறங்காவலர் சம்பத் குமார் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டார்.

MUST READ