spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"அ.தி.மு.க.வுக்கு உரிய மரியாதை அளிக்க தயாராக இருக்கிறோம்"- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

“அ.தி.மு.க.வுக்கு உரிய மரியாதை அளிக்க தயாராக இருக்கிறோம்”- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

-

- Advertisement -

 

"அ.தி.மு.க.வுக்கு உரிய மரியாதை அளிக்க தயாராக இருக்கிறோம்"- மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
File Photo

ஒருநாள் பயணமாக சென்னைக்கு வந்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (ஜூன் 20) மாலை 05.00 மணிக்கு நடைபெற்ற மத்திய பா.ஜ.க. அரசின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டார்.

we-r-hiring

ஆதிபுருஷ் படத்தை உடனே தடை செய்க! மோடிக்கு கடிதம்

அப்போது உரையாற்றிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “பிரதமர் நரேந்திர மோடிக்கு திருக்குறள் வழிகாட்டும் நூலாகத் திகழ்கிறது. தமிழகம் சிறந்த கலாச்சார உடைய மாநிலம்; சென்னையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியா என்ன சொல்லப்போகிறது என உலக நாடுகள் காத்துக் கிடக்கின்றன. இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழியாக தமிழ் மொழி விளங்குகிறது. தமிழகத்தின் பெருமையான செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியதற்கு பிரதமருக்கு நன்றி கூறுவோம்.

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் அரசு ஊழல் செய்வதை இந்தியா முழுவதும் பார்க்கிறது. தமிழகத்தில் ஒரே ஒருமுறை பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்துங்கள், ஊழலற்ற ஆட்சியைத் தருகிறோம். பா.ஜ.க.வை ஆட்சியில் அமர்த்தினால், ஊழல் செய்தவர்கள் சிறையில் இருப்பார்கள். செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தர்மத்தின் படி அ.தி.மு.க.வுக்கு உரிய மரியாதை அளிக்க தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் ராம் சரண்- உபாசனா தம்பதிக்கு திரைப் பிரபலங்கள் வாழ்த்து!

இந்த கூட்டத்தில், பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் மாநில நிர்வாகிகள், சென்னை மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ