spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான மீல்மேக்கர் குழம்பு செய்வது எப்படி?

குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான மீல்மேக்கர் குழம்பு செய்வது எப்படி?

-

- Advertisement -

தேவையான பொருட்கள்;

மீல்மேக்கர்           -1 கப்

we-r-hiring

வெங்காயம்          -1

தக்காளி                  -3

இஞ்சி                       -சிறிதளவு

பூண்டு                     -10 பல்

சீரகம்                       -2ஸ்பூன்

மஞ்சள் தூள்           -1/2 ஸ்பூன்

மிளகாய் தூள்        -1/2ஸ்பூன்

கடுகு                        -1/2 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு   -1/2 ஸ்பூன்

பெருஞ்சீரகம்          -1/2 ஸ்பூன்

தேங்காய் பால்       -1/2 கப்

வேக வைத்த பச்சை பட்டாணி-1/2 கப்

கொத்தமல்லி           – சிறிதளவு

உப்பு                              -தேவையான அளவு

எண்ணெய்                  – தேவையான அளவு

செய்முறை;

  • மீல்மேக்கரை சுடுதண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • இஞ்சி ,பூண்டினை அரைத்து பேஸ்டாக வைத்துகொள்ள வேண்டும்.சீரகத்தை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம் ,தக்காளியினை   பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கடாயில் தேவையான அளவு  எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு,பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பிறகு வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கவும்.
  • பிறகு இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு நன்றாக வதக்கவும்.மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள் ,உப்பு சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வரும் போது மீல்மேக்கரைப் போட்டு வதக்கவும்.
  • பின்னர் வேகவைத்த பச்சை பட்டாணியை போட்டு நன்றாக கிளறி விடவும்.
  • தேங்காய் பால் ஊற்றி வறுத்து வைத்த  சீரகத்தை சேர்த்து கொதிக்கவிடவும்.பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும்.
  • இப்போது சுவையான மீல்மேக்கர் குழம்பு தயார்.சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.மேலும் சப்பாத்தி,தோசைக்கும் ஏற்றது.
  • குழந்தைகள் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

மீல்மேக்கரின் பயன்கள்;

  • மெக்னீசியம் ,பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
  • எலும்பின் பலத்தை அதிகரிக்கிறது.
  • மார்பக புற்று நோயை கட்டுப்படுத்துகிறது.

MUST READ