
மணிப்பூர் மாநிலத்தில் கிராம மக்கள் சூழ்ந்துக் கொண்டதால் கிளர்ச்சியாளர்களை கைது செய்ய முடியாமல், மத்திய பாதுகாப்புப் படையினர் பின்வாங்கும் நிலை ஏற்பட்டது.
நிதிப் பரிவர்த்தனை அறிக்கை- வருமான வரித்துறை நோட்டீஸ்!
சுமார் 50 நாட்கள் கடந்தும் கலவரம், போராட்டம் என மணிப்பூர் மாநிலம் வன்முறைக் களமாகவே காட்சியளிக்கிறது. மைத்தேயி இனத்தவர் மற்றும் குகி பழங்குடியினத்தவர்களுக்கு இடையேயான கலவரத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 120- யைத் தாண்டியுள்ளது. இதில், 3,000- க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், மணிப்பூர் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் முன் வைத்திருந்தனர். ஆனால், அதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிராகரித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், இம்பாலின் கிழக்கு பகுதியில் உள்ள இதாம் கிராமத்தில் ஆயுதங்களுடன் கிளர்ச்சியாளர்கள் இருப்பதாக மத்திய பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு ஆயுதங்களைக் கைப்பற்றியதுடன், 12 கிளர்ச்சியாளர்களையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
பொறியியல் கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகிறது!
ஆனால் பெண்கள் தலைமையில் 1,500 பேர் அவர்களை சூழ்ந்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி உயிர்ச் சேதத்தைத் தவிர்க்கக் கிளர்ச்சியாளர்களைப் பாதுகாப்புப் படையினர், விடுவித்தனர்.
சுமார் 20,000- க்கும் மேற்பட்ட மத்திய பாதுகாப்புப் படையினர் மணிப்பூர் மாநிலம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.