spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழ் அனைவரையும் வாழ வைக்கும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“தமிழ் அனைவரையும் வாழ வைக்கும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

 

"தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடுக"- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
Photo: DMK

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ஏற்பாடு செய்திருந்த விழாவில், தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் கலந்து கொண்டார்.

we-r-hiring

தமிழகத்தில் துவரம் பருப்பு விலை அதிகரிப்பு!

விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “யாதும் ஊரே யாவரும் கேளிர்; தமிழ் மொழி எப்போதும் வாழ வைக்கும்; வாழ வைத்துக் கொண்டே இருக்கிறது. இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழகத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, அதையும் தாண்டி அமுதாக, உயிராக, மணமாக, வளமாகவும் இருக்கிறது. ‘தமிழ்’ என்பதைப் பெயராக வைத்துக் கொள்ளும் முன்னோடி இனமாக நாம் உள்ளோம்.

நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!

தணிக்க முடியாத அளவிற்கு தமிழ், தமிழருக்கு தொன்மையான வரலாறு உண்டு. எழுத்தறிவு, பகுத்தறிவுக் கொண்ட மேம்பட்ட சமூகமாக நாம் வாழ்ந்தோம் என்பதை கீழடி நிரூபித்துள்ளது. தமிழுக்கு சொந்தக்காரர் அனைவரும் ஓரினம் என்ற உயரிய பண்பாட்டைக் கொண்டு வாழ்வோம். தொல்லியல் ஆய்வுகளுக்கு தமிழக அரசால் ஊக்கமளிக்கப்படுகிறது. நாட்டிலேயே அதிகளவில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது தமிழகத்தில் தான்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ