spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆளுநர் விவகாரம்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

ஆளுநர் விவகாரம்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

-

- Advertisement -

 

"சீண்டிப் பார்க்க வேண்டாம்; எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும்....."- மத்திய பா.ஜ.க. அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
Photo: CM MKStalin

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையை மத்திய அரசு தடுக்காவிட்டால், தமிழக மக்களின் கோபத்தை எதிர்க்கொள்ள நேரிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

we-r-hiring

இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தொல்பொருட்கள் கண்டெடுப்பு!

ஆங்கில நாளிதழுக்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். அதில், “தி.மு.க.வுக்கு நெருக்கடி ஏற்படுத்தி, வளர்ச்சியை முடக்குவதே ஆளுநரின் நோக்கம். தமிழகம் வளர்ச்சி அடைந்து வருவதை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை. தனக்கு அதிகாரம் இல்லை என்பதை அறிந்தும், மக்கள் விரோதப் போக்கில் ஆளுநர் உள்ளார்.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறையின் செயல்பாடு மனிதாபிமானமற்ற செயல். பா.ஜ.க. அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. தார்மீக அடிப்படையில் பதவி விலகக் கூறுவது ஒரு தலைப்பட்சமாக மட்டுமே இருக்கக் கூடாது. எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கவே விசாரணை அமைப்புகளை பா.ஜ.க. அரசுப் பயன்படுத்துகிறது.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியால் மட்டுமே பா.ஜ.க.வை வீழ்த்த முடியும். தி.மு.க. அமைச்சர்கள் குறி வைக்கப்படுவதால் பா.ஜ.க.விற்கு எதிரான நிலைப்பாட்டை மாற்ற முடியாது. விசாரணை அமைப்பான அமலாக்கத்துறை பா.ஜ.க.வின் கிளையாக மாறிவிட்டது. ஆளுநருக்கு கடிவாளம் போடாவிட்டால் மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும்.

கோயம்பேடு சந்தை..தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவு

எதிர்க்கட்சிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது; பா.ஜ.க.விற்கு எதிரான நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை. தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதால் தமிழக அமைச்சர்கள் மீது குறி வைத்துள்ளனர். மாநிலத்திற்கு ஆளுநர் பதவி தேவையற்றது; தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆளுநர் விமர்சனம் செய்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ