spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை"- அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி!

“நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை”- அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி!

-

- Advertisement -

 

"நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை"- அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி!
Photo: TN Govt

தமிழகத்தில் தக்காளி கிலோ ரூபாய் 120 முதல் ரூபாய் 160 வரை விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தக்காளி விலையைக் குறைக்கும் நடவடிக்கை குறித்து அமைச்சர் பெரியகருப்பன், சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அரசு அதிகாரிகளுடன் இன்று (ஜூலை 03) மதியம் ஆலோசனை மேற்கொண்டார்.

we-r-hiring

கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து நொறுக்கி கொள்ளை முயற்சி

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பெரியகருப்பன், “சென்னையில் உள்ள 82 நியாய விலைக்கடைகளில் நாளை (ஜூலை 04) முதல் தக்காளி விற்பனை செய்யப்படும். வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை எனப் பிரித்து மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். அதன்படி, வட சென்னையில் 25, மத்திய சென்னையில் 22, தென் சென்னையில் 35 என மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்.

மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் உள்நோக்கம் ஏதுமில்லை- திருமா

அனைத்து மாவட்டங்களிலும் ஒரு சில ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை திட்டம் விரிவுபடுத்தப்படும். நாளை (ஜூலை 04) முதல் 111 கடைகளில் குறைந்தது தக்காளி ரூபாய் 50 முதல் ரூபாய் 60- க்கு விற்பனைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அகில இந்திய அளவில் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தக்காளி விலை உயர்வு ஏற்படுவது தான் என்றாலும், இனி நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தக்காளி பதுக்கல் உள்ளிட்டச் செயல்களில் வியாபாரிகள் யாரும் ஈடுபடவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ