spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது- தீர்ப்பு விவரம்!

ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது- தீர்ப்பு விவரம்!

-

- Advertisement -

 

ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது-  தீர்ப்பு விவரம்!
File Photo

தேனி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் ரவீந்திரநாத் குமாரின் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை விரிவாகப் பார்ப்போம்.

we-r-hiring

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு- விசாரணையை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

வாணி ஃபேப்ரிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த போது பெற்ற ஊதியத்தையும், விவசாயத்தில் மட்டும் வருமானம் ஈட்டியதாகக் கூறிய நிலையில், வட்டித் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் மூலம் கிடைத்த வருமானத்தையும் ரவீந்திரநாத் குமார் மறைத்துள்ளார். ரூபாய் 4.16 கோடிக்கு அசையும் சொத்துகள் உள்ள நிலையில், ரூபாய் 1.35 கோடியே இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும், வாணி ஃபேப்ரிக்ஸ் நிறுவனத்தில் வைத்திருக்கும் 15,000 பங்குகள் வைத்திருப்பதை வேட்பு மனுவில் மறைத்துள்ளதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரவீந்திரநாத் குமாரின் சொத்து விவரங்கள் குறித்து தேர்தல் அதிகாரி முறையாக விசாரணை செய்யவில்லை. சொத்து, கடன், பொறுப்பு வருமானம் ஆகியவற்றை மறைத்தது நிரூபிக்கப்பட்டது. இவ்வாறு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு- ஆளுநர் மாளிகை விளக்கம்!

எனவே, ரவீந்திரநாத் குமாரின் வேட்பு மனுவை ஏற்றது முறையற்றது, அதனால் அவரது வெற்றி செல்லாது என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இதனிடையே, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக ரவீந்திரநாத் குமாருக்கு ஒருமாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ