spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தே.மு.தி.க கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்-அண்ணா அறிவாலயம்

தே.மு.தி.க கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்-அண்ணா அறிவாலயம்

-

- Advertisement -

தே.மு.தி.கவில் பிரேமலதா மற்றும் சுதீஷின் ஆதிக்கம் அதிகமானதால், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளதாக தே.மு.தி.கவின் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தே.மு.தி.கவில் பிரேமலதா மற்றும் சுதீஷின் ஆதிக்கம் அதிகமானதால், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளதாக தே.மு.தி.கவின் முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக- முதல்வர் மு.க.ஸ்டாலின்

பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மதியழகன் தலைமையில், மாற்று கட்சிகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில்  இணைந்தனர்.

we-r-hiring

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, தே.மு.தி.க கட்சியின் 110 நிர்வாகிகள், அ.தி.மு.கவைச் சேர்ந்த 12 நிர்வாகிகள், ப.ஜ.க.வில் இருந்து 12 நிர்வாகிகள் என மாற்றுக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், பகுதி மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 150 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சென்னை அண்ணா அறிவாலயம்

இணைப்புக்கு பின்னர் பேட்டியளித்த தே.மு.தி.கவை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் செயலாளர் அன்பரசன்,

அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்த தாம், அந்த வேலையை உதறிவிட்டு மக்கள் சேவைக்காக தே.மு.தி.கவில் இணைந்ததாகவும் ஆனால் தே.மு.தி.கவில் இருந்து கொண்டு, தன்னால் அதை செய்ய இயலவில்லை என்றும் கூறினார்.

திமுகவால் ஈர்க்கப்பட்ட விஜயகாந்தை குறை சொல்ல முடியாது என கூறிய அன்பழகன்,

இன்றைய காலகட்டத்தில் கட்சியில் என்ன நடக்கிறது? என விஜயகாந்த்துக்கு தெரியவில்லை என்றார்.

விஜயகாந்த் நன்றாக இருந்திருந்தால் கட்சி நன்றாக இருந்திருக்கும் என்றும் தே.மு.தி.கவில் பிரேமலாதா, சுதீஷ் ஆதிக்கம் அதிகம் உள்ளதால், அதிலிருந்து விலகியதாகவும் தெரிவித்தார்.

பாஜகவில் இருந்து விலகிய தீனா அளித்த பேட்டியில்,

பாஜகவில் கோஷ்டி மோதல் அதிகமாக இருப்பதால் திமுகவில் இணைந்துள்ளதாக கூறினார்.

திமுகவில் புதிதாக இணைந்த அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி, பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

MUST READ