
கடந்த 2022- ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது, குறைந்த மழைப்பொழிவுப் பகுதிகள் வறட்சிப் பகுதியாக அறிவித்துள்ள தமிழக அரசு, அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘அயலான்’ படம் குறித்து அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய இரண்டு பகுதிகளையும், சிவகங்கை மாவட்டத்தில் தேவக்கோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார்கோவில் ஆகிய நான்கு பகுதிகளையும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர், நயினார்கோவில், ஆர்.எஸ்.மங்கலம், திருப்புல்லாணி, திருவாடனை ஆகிய பகுதிகளையும் வறட்சிப் பாதித்தப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காவாலா பாடலுக்கு அளவில்லா ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி…….. நடிகை தமன்னா!
அதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி, மண்டபம், முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி ஆகிய ஐந்து பகுதிகளையும், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய ஐந்து பகுதிகளையும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி, திருச்சுழி ஆகிய பகுதிகளையும் வறட்சிப் பாதித்தப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


