spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதனுஷின் மாஸ்டர் பிளான்.... வரிசையில் நிற்கும் பான் இந்தியா படங்கள்!

தனுஷின் மாஸ்டர் பிளான்…. வரிசையில் நிற்கும் பான் இந்தியா படங்கள்!

-

- Advertisement -

D48- கேப்டன் மில்லர்

தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் இணைந்து சிவராஜ்குமார், ஜான் கொகேன், பிரியங்கா மோகன், சந்திப் கிஷன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.ஒரு பீரியாடிக் படமாக உருவாக்கி வரும் இந்த படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது.மேலும் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவில் வெளியிடப்பட்ட டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் இந்த படம் வருகின்ற டிசம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் உள்ள திரைப்படம் தனுஷின் கேரகரில் மிகவும் முக்கியமான படமாகவும் மிக பிரம்மாண்டமான படமாகவும் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

D49

தனுஷ் தனது அடுத்த படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. நெல்சன் திலிப் குமார் ரஜினி நடிப்பில் ஜெயலலிதா திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதன் பிறகு நெல்சன் தனுஷ் நடிப்பில் புதிய படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க போவதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த படம் தனுஷின் 49 வது படமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் தனுஷின் 49 வது படம் சர்ப்ரைஸ் ஆகவே உள்ளது.

D50

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ப. பாண்டி திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் தனுஷ் உடன் எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், விஷ்ணு விஷால், அபர்ணா பால முரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்காக தனுஷ் மொட்டை அடித்து தனது கெட்டப்பை மாற்றி உள்ளார். இதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் தொடங்கப்பட்டு சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் தலைப்பு மற்றும் மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

D51

தனுஷ் தனது 51 வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு நேற்று போஸ்டர் உடன் வெளியானது. அதன்படி தனுஷின் D51 படத்தை சேகர் கம்முலா ஹை பட்ஜெட்டில் உருவாக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இருக்கிறது.வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாகவும் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருந்த போதிலும் இது சம்பந்தமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

D52

தனுஷ் தனது 52 ஆவது படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே தனுஷ் ஆனந்த் எல் ராய் கூட்டணி ரஞ்சனா மற்றும் அட்ரங்கி ரே படங்களில் இணைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் மூன்றாவது முறையாக தனுஷின் 52 வது படத்தில் இணைய இருக்கிறது.

தேரே இஸ்க் மேயின் ‘என்று இந்த படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. கலர் எல்லோ ப்ரோடுக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமான் இசையிலும் இப்படம் உருவாக இருக்கிறது.

விமானப்படை கதை களத்தில் காதல் கலந்த படமாக உருவாக இருக்கிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இதன் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டில் துவங்கப்படும் என்று கூறப்படுகிறது.

 

MUST READ