அதிமுகவில் மீண்டும் இணைந்தார் அன்வர் ராஜா
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா.
2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அன்வர் ராஜா. இவர் ராமநாதபுரம் மக்களவை தொகுதி எம்பியாகவும் பணியாற்றியுள்ளார். எடப்பாடி பழனிசாமியை விமர்சித்ததுடன் சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி அளித்ததால் 2021 ஆம் ஆண்டு அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரம் என அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.இந்த சூழலில் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பழனிசாமி இல்லத்திற்கு சென்று, அவரை சந்தித்த அன்வர் ராஜா மன்னிப்பு கடிதம் கொடுத்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

இதையடுத்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில் மீண்டும் அட்சியில் இணைந்துள்ளார் அன்வர் ராஜா. பிரதமர் ராமநாதபுரத்தில் போட்டியிடுவதாக தகவல் வெளியான நிலையில், அன்வர் ராஜா திடீரென கட்சியில் இணைந்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.